மன அழுத்தத்தை குறைக்க சில வழிகள்(Stress - To be Reduced)
இன்றைய பரப்பரப்பான சூழ்நிலையில் எல்லாருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை மன அழுத்தம். இது நம்முள் அமைதியாய் இருந்து பின்பு தன சுயரூபத்தை வெளியில் காட்டி நம் உடல் நலத்தையும் பாதிக்கசெய்கிறது . எனவே நாம் நம் மன அழுத்தத்தை கட்டுபடுத்தி நம் ஆரோக்கியத்தை பேணிகாத்து கொள்ளவேண்டும். 1) நமக்காக நேரத்தை அவசியம் ஒதுக்க வேண்டும். டென்சன் ஏற்படும்போதும் ,அசதியாக இருக்கும் போதும் நாம் நமக்கு போதிய ஓய்வை எடுத்துக்கொள்ள வேண்டும். 2) நேரத்தையும், நமது வேலைகளையும் நாம் கவனமாக திட்டமிடுதல் வேண்டும் 3) நம் ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டும் 4) நமக்கு வரும் பெரிய மாறுதல்களை நம் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும் 5) யாரிடமாவது நமது பிரச்சனையை மனம் விட்டு பேசி பழகிக்கொள்ள வேண்டும் 6) நாம் நமது குடும்பத்தாரிடமும் , நண்பர்களிடமும் நல்ல ஆரோக்கியமான உறவை கொடுக்க வேண்டும் 7) நம்மை நாமே நேசிக்கா விட்டால் பின் யார் நேசிப்பது? எனவே உங்களை நீங்களே நேசயுங்கள், நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள் 8) " முடியாது "என்பதை தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்த பழகிக்கொள்ளவேண்டும் 9)...